என் மலர்

  தமிழ்நாடு

  மேட்டூர் அணை
  X
  மேட்டூர் அணை

  மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 9 ஆயிரத்து 314 கன அடியாக அதிகரிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
  மேட்டூர்:

  தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 5 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை 8 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.

  இதனால் ஒகேனக்கல்லில் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்கிறார்கள். மேலும் படகில் குடும்பத்துடன் சவாரியும் சென்று இயற்கை அழகை ரசித்து வருகிறார்கள்.

  ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் தண்ணீருடன் மழை நீரும் சேர்ந்து நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 7 ஆயிரத்து 661 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து வினாடிக்கு 9 ஆயிரத்து 314 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

  அணையில் இருந்து காவிரியில் 1500 கன அடி தண்ணீர் குடிநீருக்காக திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

  நேற்று 108.14 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 108.60 அடியானது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக உயர வாய்ப்புள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

  Next Story
  ×