search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோவிலுக்குள் புகுந்த மழைநீரை பக்தர்கள் வெளியேற்றும் காட்சி
    X
    கோவிலுக்குள் புகுந்த மழைநீரை பக்தர்கள் வெளியேற்றும் காட்சி

    டெல்டா மாவட்டங்களில் 4 மணிநேரம் இடைவிடாத மழை

    திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, வல்லம், பூதலூர், பாபநாசம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.

    சுமார் 4 மணி நேரம் இடைவிடாது கொட்டிய மழையால் சாலைகளில் வெள்ளம்போல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. தஞ்சையில் சாலைகளில் தண்ணீர் ஓடியதால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.

    மேலும் தஞ்சை மூலை அனுமார் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பக்தர்கள் அவதியடைந்தனர். மழை நின்ற பிறகு தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

    தஞ்சை ரெயில்வே கீழ்பாலத்தில் 2 அடி உயரத்துக்கு தண்ணீர் நின்றதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதன் காரணாக மாற்றுபாதையில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டது.

    இதேப்போல் திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது.

    டெல்டா மாவட்ட பாசனத்துக்காக இன்னும் சில நாட்களில் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் தற்போது பெய்து வரும் மழை நெற்பயிர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×