என் மலர்

  தமிழ்நாடு

  கோப்பு படம்
  X
  கோப்பு படம்

  நேற்று நடைபெற்ற 11ஆம் வகுப்பு ஆங்கில தேர்வை 44,394 மாணவர்கள் எழுதவில்லை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மொழிப்பாடத் தேர்வில் 43,533 மாணவர்கள் பங்கேற்கவில்லை என்று தேர்வுத்துறை தெரிவித்திருந்தது.
  சென்னை:

  தமிழகத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வு கடந்த 5ந் தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு 6ந் தேதியும் தொடங்கி நடைபெற்று வருகின்றன. 

  பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு நடப்பாண்டிற்கான பொதுத்தேர்வு கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது. 

  இந்த தேர்வு வருகிற 31-ந்தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தேர்வினை 4 லட்சத்து 33 ஆயிரத்து 684 மாணவர்களும், 4 லட்சத்து 50 ஆயிரத்து 198 மாணவிகளும் எழுதுகின்றனர். தமிழகம் முழுவதும் 3,119 மையங்களில் இத்தேர்வு நடைபெறுகிறது. 

  இந்த நிலையில், தமிழகத்தில் நேற்று நடந்த 11ஆம் வகுப்பு ஆங்கில தேர்வுக்கு 44,394 மாணவர்கள் வரவில்லை என்று அரசு தேர்வுதுறை  தெரிவித்து உள்ளது. 

  முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மொழிப்பாடத்தேர்வில் 43,533 மாணவர்கள் தேர்வுக்கு வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
  Next Story
  ×