என் மலர்

  தமிழ்நாடு

  பாம்பன் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது
  X
  பாம்பன் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது

  பாம்பன் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்-மீனவர்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கரையோர மீனவர்கள் பாதுகாப்பாக இருக்கவும், கரையோரத்தில் மீன் பிடிக்கச் செல்லும் நாட்டுப்படகு மீனவர்கள் பாதுகாப்பாக மீன் பிடிக்க வேண்டும் என்றும் துறைமுக அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

  ராமேசுவரம்:

  வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது. இதனால் அந்தமான் தீவு பகுதியில் ஆழ் கடலில் புயல் மையம் கொண்டுள்ளது.

  அதன் தாக்கமாக தமிழக கடலோரப் பகுதியான பாக் ஜலசந்தி மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ஆழ்கடலில் சூறாவளி காற்று வீசத்தொடங்கியுள்ளது. இதனால் பாம்பன், ராமேசுவரம், மண்டபம், தனுஷ்கோடி ஆகிய கடலோரப் பகுதியில் ஆழ் கடலில் பலத்த காற்று வீசி வருகிறது.

  இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலோரப் பகுதியில் வசித்து வரும் மீனவர்களுக்கு தெரிவிக்கும் வகையில் பாம்பன் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

  கரையோர மீனவர்கள் பாதுகாப்பாக இருக்கவும், கரையோரத்தில் மீன் பிடிக்கச் செல்லும் நாட்டுப்படகு மீனவர்கள் பாதுகாப்பாக மீன் பிடிக்க வேண்டும் என்றும் துறைமுக அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

  Next Story
  ×