என் மலர்

  தமிழ்நாடு

  மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சசிகலா வந்தபோது எடுத்த படம்.
  X
  மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சசிகலா வந்தபோது எடுத்த படம்.

  மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சசிகலா சாமி தரிசனம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து வெளியே வந்த சசிகலா, கீழசித்திரை வீதியில் உள்ள மதுரை வீரன் சன்னதிக்கு நடந்து சென்றார். அங்கு சுவாமிக்கு சிறப்பு வழிபாடு, பூஜைகள் நடத்தப்பட்டன.
  மதுரை:

  கடந்த சில நாட்களாக சசிகலா ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இன்று காலை அவர் திருச்செந்தூர் முருகன் கோவிலில் வழிபாடு செய்தார். பின்பு திருச்செந்தூரில் இருந்து கார் மூலம் மதுரைக்கு வந்தார்.

  காலை 11 மணியளவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தார். அங்கு அவருக்கு தொண்டர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு கொடுத்தனர். பின்பு அவர் கோவிலுக்குள் சென்று மீனாட்சி அம்மன் சன்னதி, சுந்தரேஸ்வரர் சன்னதிகளில் வழிபாடு செய்தார்.

  அதன் பிறகு கோவிலில் இருந்து வெளியே வந்த அவர், கீழசித்திரை வீதியில் உள்ள மதுரை வீரன் சன்னதிக்கு நடந்து சென்றார். அங்கு சுவாமிக்கு சிறப்பு வழிபாடு பூஜைகள் நடத்தப்பட்டன. அங்கு சசிகலா வழிபாடு செய்தார்.

  இதனைத் தொடர்ந்து சசிகலா காரில் விமான நிலையத்துக்கு சென்றார். அங்கிருந்து விமானத்தில் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.
  Next Story
  ×