என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு (Tamil Nadu)
X
வெளிநாட்டில் மலர்ந்த காதல்- ஆப்பிரிக்க பெண்ணை மணந்த கோவை என்ஜினீயர்
Byமாலை மலர்29 April 2022 2:28 PM IST (Updated: 29 April 2022 2:28 PM IST)
திருமணத்தில் பங்கேற்ற ஆப்பிரிக்க மணமகளின் உறவினர்கள் தமிழக பாரம்பரிய முறைப்படி வேட்டி, சேலை அணிந்து பங்கேற்றது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
கவுண்டம்பாளையம்:
கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி தர்மலட்சுமி. இவர்களது மகன் முத்துமாரியப்பன்.
இவர் டிப்ளமோ மெக்கானிக் என்ஜினீயரிங் படித்துவிட்டு மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள கேம்ரூன் பகுதியில் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார். இவர் இந்து மதத்தை சேர்ந்தவர்.
அப்போது அவருக்கும் மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள கேம்ரூனில் வசிக்கும் எம்மா எஞ்சிமா மொசொக்கே என்பவரின் மகள் வால்மி இனாங்கா மொசொக்கே என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. வால்மி இனாங்கா கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்.
2 பேரும் தங்களது காதல் விவகாரத்தை இருவரது வீட்டிலும் தெரிவித்து சம்மதம் பெற்றனர். மேலும் வால்மி இனாங்கா இந்தியாவில் திருமணத்தை நடத்த வேண்டும் என்று முத்துமாரியப்பனிடம் கூறியுள்ளார்.
அதன்பிறகு அவர்கள் கோவை வந்தனர். இன்று கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள குமரன் மில் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இவர்களது திருமணம் இந்து முறைப்படி நடைபெற்றது.
இதில் மாப்பிள்ளையின் பெற்றோர் மற்றும் உறவினர்களும், மணப்பெண்ணின் பெரியப்பா ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்த மொக்கோசோ லுக்காஸ் ஜேம்ஸ் ம்பொமே, அவரது மனைவி ஷோபி எஞ்சே நமொன்டோ மற்றும் உறவினர்கள், பெண்ணின் நண்பர்கள் என வந்திருந்தனர்.
அதனை தொடர்ந்து திருமண மண்டபத்தில் நாதஸ்வரம் வாத்திய குழுவினரின் இசையுடன், பெண்ணை பல்லக்கில் வைத்து அழைத்து வந்தனர். அய்யர் ஹோமம் வளர்த்து, பூஜைகள் செய்து, பெரியவர்கள் தாலி எடுத்துக்கொடுக்க மணமகன் முத்துமாரியப்பன் மணமகள் வால்மி இனாங்கா கழுத்தில் தாலி கட்டினார். தொடர்ந்து மணமேடையை அவர்கள் சுற்றி வந்தும், மணமகளுக்கு கையில் மோதிரமும், காலில் மெட்டியையும் மணமகன் அணிவித்து விட்டார்.
இதுகுறித்து மணமகள் வால்மி இனாங்கா கூறும்போது, நாங்கள் இருவரும் கேம்ரூன் பகுதியில் உள்ள ஒரே கம்பெனியில் வேலை செய்து வருவதாகவும், அங்கு பழக்கமாகி காதல் ஏற்பட்டதாகவும், அதன்பிறகு இந்து முறைப்படி தான் திருமணம்செய்துகொள்ள வேண்டும் என்று இருவரும் முடிவு செய்து தற்போது திருமணம் முடிந்துள்ளது. எங்களுக்கு பெருமையாக உள்ளது என்றார்.

Next Story
×