search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தூத்துக்குடி அனல்மின் நிலையம்
    X
    தூத்துக்குடி அனல்மின் நிலையம்

    தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு- மின்உற்பத்தி பாதிப்பு

    தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக 840 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 யூனிட்டுகள் செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் தினமும் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக தூத்துக்குடி அனல்மின் நிலையத்திற்கு போதிய நிலக்கரி வராமல் இருந்தது. இதனால் அவ்வப்போது சில யூனிட்டுகள் நிறுத்தி வைக்கப்படுவதும், பின்னர் நிலக்கரி வந்ததும் மீண்டும் இயங்குவதுமாக இருந்து வருகிறது.

    இந்நிலையில் நிலக்கரி தட்டுப்பாடு மேலும் அதிகரித்த காரணத்தால் இன்று காலை முதல் 4 யூனிட்டுகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் தற்போது 1வது அலகில் மட்டுமே மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது. அதன்மூலம் 210 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரே நேரத்தில் 4 யூனிட்டுகளில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால் 840 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

    கோடை காலத்தையொட்டி தற்போது மின்தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் ஒரேநேரத்தில் 840 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×