என் மலர்

  தமிழ்நாடு

  பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்ய எந்திரம்
  X
  பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்ய எந்திரம்

  பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்ய எந்திரம்- பொதுமக்கள் பயன்படுத்த கலெக்டர் வேண்டுகோள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவள்ளூர் பஸ் நிலையத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்யும் எந்திரம் தனியார் தொண்டு நிறுவனம் மூலம் நிறுவப்பட்டு உள்ளது.
  திருவள்ளூர்:

  பொதுமக்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் கழிவுகளை அப்புறப்படுத்துவது தற்போது பெரும் சவாலாக உள்ளது. பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறித்து மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. ஒரு முறை பயன்படுத்தி துக்கி வீசப்படும் பிளாஸ்டிக் பாட்டில் கழிகளை அப்புறப்படுத்துவதும் கடும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.

  இந்த நிலையில் திருவள்ளூர் பஸ் நிலையத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்யும் எந்திரம் தனியார் தொண்டு நிறுவனம் மூலம் நிறுவப்பட்டு உள்ளது.

  இதனை பொதுமக்கள் பயண்பாட்டுக்கு மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.

  இதுகுறித்து கலெக்டர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் கூறும்போது, பிளாஸ்டிக் இல்லா நகரை உருவாக்கும் முயற்சியாக பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்யும் எந்திரம் தனியார் தொண்டு நிறுவனம் மூலம் நிறுவப்பட்டு உள்ளது.

  திருவள்ளூர் நகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை பணியில் மக்கும் கழிவுகளை இயற்கை முறையில் உரம் தயாரித்து மறுசுழற்சி செய்யப்படுகின்றன. அதே போல் மக்காத கழிவுகளில் ஒன்றான பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை கையாள்வது மிகப்பெரிய சவாலாக உள்ளது.

  இதற்காக திருவள்ளூர்பஸ் நிலையத்தில் பொதுமக்களால் உபயோகப்படுத்தப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்வதற்காக மறுசுழற்சி வைக்கப்பட்டு உள்ளது என்றார்.

  நிகழ்ச்சியில், திருவள்ளூர் நகர மன்றத் தலைவர் உதயமலர் பாண்டியன், நகராட்சி ஆணையர் நாகூர் மீரான் ஒலி, சுகாதார அலுவலர் கோவிந்தராஜ், பிளாஸ்டிக் பாட்டில் மறுசுழற்சி எந்திரத்தை தயாரித்த தனலட்சுமி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
  Next Story
  ×