என் மலர்

  தமிழ்நாடு

  விபத்து
  X
  விபத்து

  சேலம் ஊத்துமலையில் ஆட்டோ கவிழ்ந்து 2 பெண்கள் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சேலம் ஊத்துமலையில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பெண்கள் பலியாயினர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  சேலம்:

  சேலம் அஸ்தம்பட்டி சகாதேவபுரம் பகுதியை சேர்ந்தவர் அர்ச்சனா வயது (40), இவரும் அதே பகுதியை சேர்ந்த உறவினர்களான கல்யானி (29), சேபா (56), ரேவதி ஆகியோருடன் சீலநாயக்கன் பட்டியில் உள்ள ஊத்துமலை முருகன் கோவிலுக்கு ஆட்டோவில் நேற்று மாலை சென்றனர். ஆட்டோவை டிரைவர் மாதேஸ்வரன் ஓட்டி சென்றார்.

  தரிசனம் முடிந்து வரும் போது ஊத்துமலை அடி வாரத்திற்கு வரும் வளைவு பாதையில் ஆட்டோ திடீரென கட்டுப்பாட்டை இழந்து 2 அடி தடுப்பு சுவரில் மோதி 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

  இதில் பலத்த காயம் அடைந்த அர்ச்சனா சம்பவ இடத்திலேயே இறந்தார். சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கல்யாணி உயிரிழந்தார். டிரைவருக்கு கால் முறிந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மற்ற 2 பெண்களுக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  விபத்து குறித்து போலீசார் விசாரித்த போது, ஆட்டோவின் என்ஜினை ஆப் செய்து விட்டு அதிவேகத்தில் மலையில் இருந்து கீழே ஆட்டோவை இறக்கியதும், அப்போது கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ கவிழ்ந்ததும் தெரிய வந்தது.
  Next Story
  ×