என் மலர்

  தமிழ்நாடு

  விபத்து
  X
  விபத்து

  மாமல்லபுரம் அருகே கார் மோதி மீனவர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னையில் இருந்து மாமல்லபுரம் நோக்கி சென்ற அடையாளம் தெரியாத கார் மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் மீனவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
  மாமல்லபுரம்:

  மாமல்லபுரம் அடுத்த சூலேரிக்காடு மீனவர் குப்பத்தை சேர்ந்தவர் ஜெகதீசன்(வயது45).மீனவர். இவர் நேற்று இரவு கோவளத்தில் இருந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்று கொண்டிருந்தார்.

  அப்போது சென்னையில் இருந்து மாமல்லபுரம் நோக்கி சென்ற அடையாளம் தெரியாத கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜெகதீசன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

  இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×