search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழக அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள்
    X
    தமிழக அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள்

    தமிழ் வருட பிறப்பு விடுமுறையையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கம்

    ஏப்ரல் 13, 14ம் தேதிகளில் சென்னையிலிருந்து கூடுதலாக 1,200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில், தமிழ் வருட பிறப்பையொட்டி வரும் 14 ஆம் தேதியும், புனித வெள்ளியையொட்டி வரும் 15 ஆம் தேதி ஆகிய 2 நாட்கள் அரசு விடுமுறை நாளாக உள்ளது.

    இந்நிலையில், வரும் 17 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமையன்று வார விடுமுறை என்பதால் வரும் 16 ஆம் தேதி மட்டும் விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து வரும்16 ஆம் தேதியும் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    இந்த நிலையில், தொடர் விடுமுறையையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. 

    அதன்படி ஏப்ரல் 13, 14ம் தேதிகளில் சென்னையிலிருந்து கூடுதலாக 1,200 சிறப்பு பேருந்தகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

    சென்னையில் இருந்து கோவை, சேலம், நாகை, வேளாங்கண்ணி, தஞ்சை, மதுரை, ஈரோடு, திருப்பூர் நகரகங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப் படுகின்றன. சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.  

    இதைபோல பொதுமக்கள் சென்னைக்கு திரும்பி வருவதற்கு ஏதுவாக பிற ஊர்களில் இருந்து ஏப்ரல்17-ம் தேதி கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
    Next Story
    ×