என் மலர்

  தமிழ்நாடு

  மழையால் குமரி தடுப்பு அணையில் வெள்ளம் சீறிபாய்ந்து செல்வதை காணலாம்
  X
  மழையால் குமரி தடுப்பு அணையில் வெள்ளம் சீறிபாய்ந்து செல்வதை காணலாம்

  குமரியில் மழை நீடிப்பு- மயிலாடியில் 60.4 மி.மீ. பதிவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 37.92 அடியாக இருந்தது. அணைக்கு 271 அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.
  நாகர்கோவில்:

  தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழக வட இலங்கை கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக குமரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

  இந்த நிலையில் நேற்று மாலையில் மாவட்டம் முழுவதும் இடி மின்னலுடன் கன மழை கொட்டி தீர்த்தது. மைலாடியில் நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கிய மழை இடைவிடாது 2 மணி நேரத்திற்கு மேலாக வெளுத்து வாங்கியது. இதனால் அந்த பகுதியில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அங்கு அதிகபட்சமாக 60.4 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. நாகர்கோவில் பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி சாலை, கோட்டார் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

  சூறை காற்றுடன் பெய்த மழைக்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் நின்ற ராட்சத மரம் ஒன்று முறிந்து விழுந்தது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் முறிந்து விழுந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினார்கள்.

  பூதப்பாண்டி, சுருளோடு, ஆரல்வாய்மொழி, கொட்டாரம், ஆனைகிடங்கு, இரணியல், அடையாமடை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் நேற்று மழை பெய்தது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் இதமான குளிர் காற்று வீசத் தொடங்கி உள்ளது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் அணை பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

  திற்பரப்பு அருவி பகுதியிலும் சாரல் மழை பெய்து வருவதையடுத்து அங்கு ரம்மியமான சூழல் நிலவுகிறது. அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வந்தாலும் அருவியில் குளிப்பதற்கு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 37.92 அடியாக இருந்தது. அணைக்கு 271 அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 22.50 அடியாக உள்ளது. அணைக்கு 123 அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. சிற்றார்1 அணையின் நீர்மட்டம் 8.30 அடியாகவும், சிற்றார்2 அணையின் நீர்மட்டம் 8.40 அடியாகவும் உள்ளது.

  மாவட்டம் முழுவதும் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக விவசாயிகள் மட்டுமின்றி பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு: பேச்சிப்பாறை 15.8, பெருஞ்சாணி 38, சிற்றாறு 14.2, மாம்பழத்துறையாறு 16, நாகர்கோவில் 28.2, பூதப்பாண்டி 25.2, சுருளோடு 37.4, கன்னிமார் 18.2, ஆரல்வாய்மொழி 13, பாலமோர் 21.4, கொட்டாரம் 15.2, நிலப்பாறை 37, ஆனைகிடங்கு 9.2, அடையாமடை 52, புத்தன்அணை 37.4.  Next Story
  ×