search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இடமாற்றம்
    X
    இடமாற்றம்

    சேலம் மாவட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் 25 பேர் அதிரடி இடமாற்றம்

    டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்ற 2 மேற்பார்வையாளர்கள், 23 விற்பனையாளர்கள் என மொத்தம் 25 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
    சேலம்:

    டாஸ்மாக்‌ கடைகளில்‌ அரசு நிர்ணயித்த விலையை காட்டிலும்‌ கூடுதல் விலைக்கு மதுபானங்கள்‌ விற்‌பனை செய்யப்படுகிறதா? என்பதை பறக்கும்‌ படை அமைத்து டாஸ்மாக்‌ நிர்வாகம்‌ கண்காணித்து வருகிறது.

    சேலம் மாவட்டத்தில் மொத்தம் 218 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 1,200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

    இந்த டாஸ்மாக் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் அதிரடி ஆய்வு நடத்தினர்.

    கடைகளில் மதுபான இருப்பு, கையிருப்பு பணம் ஆகியவற்றையும் ஆய்வு செய்தார்கள். கடைக்கு மதுபானங்கள் வாங்க வந்திருந்த மதுப்பிரியர்களிடமும் விலை தொடர்பாக விவரம் கேட்டனர். இதில் பல்வேறு கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்ற 2 மேற்பார்வையாளர்கள், 23 விற்பனையாளர்கள் என மொத்தம் 25 பேர் கண்டுபிடிக்கப்பட்டனர்.

    இவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் மாவட்டத்தில் வெவ்வேறு பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.


    Next Story
    ×