என் மலர்

  தமிழ்நாடு

  மீனவர்கள்
  X
  மீனவர்கள்

  கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையால் மீனவர்கள் விரட்டியடிப்பு- 16 பேர் சிறைபிடிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இலங்கை கடற்படையால் 16 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது ராமேசுவரம், மண்டபத்தில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
  ராமேசுவரம்:

  தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும்போது இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்படுவது வாடிக்கையாக நடந்து வருகிறது.

  ராமேசுவரம், நாகை, மண்டபம் பகுதி மீனவர்கள் அடிக்கடி சிறை பிடிக்கப்பட்டதால் மீனவ குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

  கடந்த சில வாரங்களுக்கு முன்பு கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவுக்கு தமிழக மீனவர்கள் சென்றனர். அப்போது மீனவர் சிறைபிடிப்பு தொடர்பாக பேசப்பட்டது.

  இலங்கை மீனவர்கள் கோரிக்கை மனு கொடுத்ததாக தமிழகம் திரும்பிய ராமேசுவரம் மீனவர்கள் தெரிவித்தனர். அதனை முதலமைச்சரிடம் சமர்ப்பிக்க இருப்பதாகவும் அவர்கள் கூறினர். இதனால் இனி சிறைபிடிப்பு சம்பவம் நடைபெறாது என மீனவர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர்.

  ராமேசுவரம், மண்டபத்தில் இருந்து நேற்று சுமார் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இவர்களில் சிலர் கச்சத்தீவு அருகே மீன்பிடி பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இலங்கை கடற்படையினர் ரோந்து கப்பல்களில் வந்தனர். அவர்கள் “இது எங்கள் எல்லைப்பகுதி, இங்கு மீன்பிடிக்கக்கூடாது” என மீனவர்களை விரட்டியடித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த ராமேசுவரம் மீனவர்கள் அங்கிருந்து அவசர அவசரமாக புறப்பட்டனர். கடலில் விரித்திருந்த தங்களது வலைகளை எடுத்துக்கொண்டு அவர்கள் வேக வேகமாக கிளம்பினர். இருப்பினும் இலங்கை கடற்படை மீனவர்களை விரட்டியடித்தது.

  அப்போது திடீரென ஒரு படகையும், அதில் இருந்த 12 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். இந்த சம்பவம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

  அவர்கள் இன்று காலை போதிய மீன்கள் இல்லாமல் கரை திரும்பிய பிறகு தான் மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட விவரம் தெரியவந்தது.

  இதற்கிடையே மண்டபத்தைச் சேர்ந்த விசைப்படகில் சதீஷ், வேலாயுதம், விசர் அலி, ராஜகனி ஆகிய 4 மீனவர்கள் தனுஷ்கோடி- தலைமன்னார் இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அவர்களையும் இலங்கை கடற்படை படகுகளோடு சிறைபிடித்துச் சென்றது.

  16 மீனவர்களையும் இலங்கை மயில்பட்டி கடற்படை முகாமுக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 16 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது ராமேசுவரம், மண்டபத்தில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
  Next Story
  ×