search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் பணியாளர்களுக்கு மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் பேடி தலைமையில் பயிற்சி நடந்தது
    X
    வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் பணியாளர்களுக்கு மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் பேடி தலைமையில் பயிற்சி நடந்தது

    சென்னையில் ஓட்டு எண்ணும் ஊழியர்களுக்கு இன்று சிறப்பு பயிற்சி வகுப்பு

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுகளை எவ்வாறு எண்ணுவது என்பது குறித்து ஊழியர்களுக்கு இன்று பயிற்சி அளிக்கப்பட்டது.

    சென்னை:

    சென்னையில் ஓட்டு எண்ணிக்கை 15 மண்டலங்களில் 37 இடங்களில் நடை பெறுகிறது.

    ஓட்டு எண்ணும் பணியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபடுகிறார்கள். இந்த பணியை கண்காணிக்க பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுகளை எவ்வாறு எண்ணுவது என்பது குறித்து ஊழியர்களுக்கு இன்று பயிற்சி அளிக்கப்பட்டது. சென்னை மாநகராட்சி அம்மா மாளிகையில் இந்த பயிற்சிகள் வழங்கப்பட்டன.

    இதனை மாநகராட்சி கமி‌ஷனர் ககன்தீப்சிங் பேடி மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இது தவிர மேலும் 2 இடங்களில் பயிற்சி அளிக்கப்பட்டது.

    ஓட்டு எண்ணிக்கையின் போது மின்னணு எந்திரங்களை எப்படி கையாள வேண்டும்? தேர்தல் முடிவுகளை தெரிவிப்பது, எந்திரங்களில் பதிவான வாக்குகளை முறையாக அறிவிப்பது குறித்து இந்த பயிற்சியில் விளக்கம் அளிக்கப்பட்டன.

    ஓட்டு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்குவதால் 6 மணிக்குள் பணியில் சேருமாறு ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் ஒதுக்கப்பட்டுள்ள பணியினை முறையாக, கவனமாக செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

    Next Story
    ×