search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஜவாஹிருல்லா
    X
    ஜவாஹிருல்லா

    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களியுங்கள் - ஜவாஹிருல்லா

    தமிழ்நாட்டின் நலனுக்காக ஓய்வு உறக்கமின்றி முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாகப் பணியாற்றி வருகிறார் என ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இந்தக் கடமையை தவறாமல் நிறைவேற்ற வேண்டும்.

    சட்டமன்றத் தேர்தலில் அளித்த பல்வேறு வாக்குறுதிகளை மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நிறைவேற்றி வருகிறது.

    தமிழ்நாட்டின் நலனுக்காக ஓய்வு உறக்கமின்றி முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாகப் பணியாற்றி வருகிறார். அதன் காரணமாகத் தான் அவர் இந்தியாவின் நம்பர் 1 முதல்வராக இருந்து வருகிறார்.

    ஆனால் இதற்கு நேர் எதிராக அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி பா.ஜ.க.வின் கொள்கை பரப்புச் செயலாளராக உருவெடுத்து, பிரதமர் மோடியின் ஒரே நாடு ஒரே தேர்தல் அடிப்படையில் தமிழக சட்டமன்ற தேர்தலும் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து 2024-ல் வர உள்ளது என்று பேசி வருகிறார். மேற்குவங்க சட்டமன்றத்தை அம்மாநில ஆளுநர் முடக்கியதைப் போல் தமிழக சட்டமன்றமும் முடக்கப்படும் எனவும் பூச்சாண்டி காட்டி வருகிறார். பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று சொல்லிக் கொண்டு அதற்கு ஆதரவான செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள் அ.தி.மு.க. தலைவர்கள்.

    நமது நாட்டில் மாநில அரசு என்பதும், மாநில சுயாட்சி என்பதும் இருக்கக்கூடாது நாட்டை 200 நிர்வாக அமைப்பாக மாற்றி ஒரே அரசாக ஒன்றிய அரசாக மட்டும் செயல்பட வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ்.சின் திட்டம். இந்த திட்டத்தின் முன்னோடி தான் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற பிரதமர் மோடியின் திட்டமாகும். மாநிலங்களின் உரிமைகளை பறிக்கு நோக்கத்துடன் கொண்டு வரப்படும் இந்த திட்டத்தை அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி பரப்பி வருவது வெட்கக்கேடாகும்.

    எனவே, அ.தி.மு.க.விற்கும், பாஜகவிற்கும் தகுந்த பாடம் புகட்டவும் மு.க.ஸ்டாலின் தலைமையில் மலர்ந்துள்ள நல்லாட்சியின் பலன்களை உள்ளாட்சியிலும் மலர வைக்க நகர்ப்புற தேர்தலில் திமுக, மனிதநேய மக்கள் கட்சி, காங்கிரஸ்,., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., வி.சி.க., ஐ.யூ.எம்.எல், கொ.ம.தே.க., தமிழக வாழ்வுரிமை கட்சி முதலிய கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×