search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அரசு பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்ற போது எடுத்த படம்.
    X
    அரசு பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்ற போது எடுத்த படம்.

    அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கலந்தாய்வு

    பொது கலந்தாய்வு வருகிற 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. முதல் முறையாக பொது கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெற இருக்கிறது குறிப்பிடத்தக்கது.
    சென்னை:

    எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு சென்னையில் நேற்று தொடங்கியது.

    ஒமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் நடந்த கலந்தாய்வின் முதல் நாளில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடந்தது.

    இதில் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 54 இடங்களும், விளையாட்டு பிரிவில் இருந்த 8 இடங்களும், முன்னாள் படை வீரர்களின் வாரிசுகள் பிரிவில் இருந்த 11 இடங்களும் நிரப்பப்பட்டன.

    அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு இன்றும், நாளையும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி அரசு பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று ஓமந்தூரர் மருத்துவமனை வளாகத்தில் தொடங்கியது. மொத்தம் 1,806 பேருக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் இன்று 1 முதல் 819 தர வரிசையில் உள்ளவர்களுக்கு கலந்தாய்வில் பங்கேற்க அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது.

    அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் கலந்தாய்வில் பங்கேற்க மாணவர்கள் காலையிலேயே அங்கு குவிந்தனர். அவர்கள் பெற்றோர்களுடன் கலந்தாய்வு நடைபெறும் வளாகத்தில் காத்திருந்தனர்.

    கலந்தாய்வு தொடங்கியதும் மாணவர்கள் ஒவ்வொருவராக அனுப்பப்பட்டனர். மாணவர்களுடன் ஒருவர் உடன் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக கலந்தாய்வுக்கு சென்றவர்களின் கைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. பின்னர் அவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது.

    கலந்தாய்வில் பங்கேற்ற அரசு பள்ளி மாணவர்கள் தாங்கள் விரும்பிய கல்லூரிகளை தேர்வு செய்தனர். அவர்களுக்கு கல்வி அதிகாரிகள் உதவி செய்து ஆலோசனைகளையும் வழங்கினார்கள்.

    7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின்படி மருத்துவ கலந்தாய்வில் முதல் 10 இடங்களை பெற்ற அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மருத்துவ படிப்புக்கான சேர்க்கை ஆணையை வழங்கினார்.

    நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கும் மருத்துவ படிப்பில் இடம் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது.

    இதில் கடந்த ஆண்டு 436 இடங்கள் கிடைத்தன. இந்த ஆண்டு 536 இடங்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கிறது.

    பொது கலந்தாய்வு வருகிற 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. முதல் முறையாக பொது கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெற இருக்கிறது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×