search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஐந்தருவியில் தண்ணீர் கொட்டும் காட்சி.
    X
    ஐந்தருவியில் தண்ணீர் கொட்டும் காட்சி.

    மலைப்பகுதியில் பெய்த மழை: குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

    கடந்த சில நாட்களாக மாலை வேளையில் மலைப்பகுதியில் மழை பெய்ததால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் இன்று தண்ணீர் வரத்து சற்று அதிகரித்து காணப்பட்டது.
    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக இந்த ஆண்டு சீசன்காலத்தை தாண்டியும் தண்ணீர் விழுந்து வந்தது. ஆனால் கடந்த மாதம் மழை இல்லாததால் குற்றாலத்தில் கடந்த பல நாட்களாக வெப்பத்தினால் தண்ணீர் இன்றி அருவிகள் வறண்டு காணப்பட்டன.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக மாலை வேளையில் மலைப்பகுதியில் மழை பெய்ததால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் இன்று தண்ணீர் வரத்து சற்று அதிகரித்து காணப்பட்டது. இதனால் இன்று குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. அவர்கள் கொரோனா வழிகாட்டு முறைகளை கடைபிடித்து வரிசையில் நின்று குளித்து சென்றனர்.

    இதேபோல் நெல்லை மாவட்டத்திலும் ஆங்காங்கே நேற்று இரவு மழை பெய்தது. மணிமுத்தாறு அணைப்பகுதியில் 2.4 மில்லிமீட்டர் மழை பதிவானது. 143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பிரதான அணையான பாபநாசத்தின் இன்றைய நீர்மட்டம்121.40அடியாகவும், சேர்வலாறு நீர்மட்டம் 123.95 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 113.80 அடியாகவும், உள்ளது.
    Next Story
    ×