search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஜி.கே.வாசன்
    X
    ஜி.கே.வாசன்

    ஆன்லைன் மூலம் நெல் கொள்முதல் செய்வதை எளிமையாக்க வேண்டும்- ஜி.கே.வாசன்

    விவசாயிகளின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் முறை இருக்க வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் நெல்லை கொள்முதல் செய்ய ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் முறை விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும்.

    அதாவது விவசாயிகளுக்கு ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் முறையில் உள்ள சிரமங்களை போக்க வேண்டும். மேலும் விவசாயிகளின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் முறை இருக்க வேண்டும்.

    குறிப்பாக ஆன்லைன் மூலம் பதிவு செய்ய முன்வரும் சாதாரண விவசாயிகளுக்கு ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்தும் வசதி இல்லாதது மற்றும் நெட்வொர்க் கிடைக்காதது ஆகியவை விவசாயிகளின் முக்கியப் பிரச்சினையாகும்.

    மேலும் ஆன்லைனில் பதிவு செய்யும் போது ஒரு பட்டாதாரர் பல புல எண்களில் விவசாயம் செய்திருக்கும் நிலையில் தற்போது நடைமுறையில் ஒரு புல எண் மட்டுமே பதிவு செய்யும் முறையை மாற்றி கிராம நிர்வாக அலுவலர் கொடுக்கும் அடங்கல் நகலில் உள்ள புல எண்களை ஆன்லைனில் பதிவு செய்யும் விதமாக மேம்படுத்த வேண்டும்.

    எனவே தமிழ்நாடு அரசின் நெல்கொள்முதல் செய்யும் ஆன்லைன் முறையில் சிறு குறு விவசாயிகளுக்கு உள்ள சிரமங்களை களையும் வகையிலும், முன் வருபவருக்கு முன்னுரிமை அளிக்கும் வகையிலும் நெல் கொள்முதல் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×