search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    போலீசார் வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை
    X
    போலீசார் வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை

    கேரளாவில் அதிகரிக்கும் தொற்று- குமரி மாவட்டத்தில் தீவிரகண்காணிப்பு

    குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த24 மணி நேரத்தில் 1,037 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

    நாகர்கோவில்:

    தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படுகிறது.

    அதன்படி தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. குமரி மாவட்டத்திலும் இன்று முழு ஊரடங்கு காரணமாக வாகனங்கள் எதுவும் ஓடவில்லை. வணிக நிறுவனங்கள், கடைகள் அனைத்தும் மூடிக்கிடந்தன.

    சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி கிடந்தது. மருந்து கடைகள் மற்றும் உணவு வினியோகிக்கும் கடைகள் மட்டுமே திறந்திருந்தன.

    குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த24 மணி நேரத்தில் 1,037 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

    தினமும் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதை தொடர்ந்து சுகாதார துறையினர் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். தொற்று பாதித்த பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

    குமரி மாவட்டம் கேரள மாநில எல்லையில் அமைந்துள்ளது. கேரளாவில் இப்போது கொரோனாவின் 3-வது அலை வேகமாக பரவி வருகிறது.நேற்று ஒரு நாளில் மட்டும் 45 ஆயிரத்து 136 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

    திருவனந்தபுரம் மாவட்டத்தில் மட்டும் 7,430 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் கேரளாவிலும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி இன்றும் அங்கு முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.

    குமரி மாவட்டத்தில் இருந்து ஏராளமான தொழிலாளிகள் கேரளாவில் வேலை பார்த்து வருகிறார்கள். அவர்கள் தினமும் குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு வாகனங்களில் சென்று வருவது வழக்கம்.

    இதுபோல கேரளாவில் இருந்தும் பலர் இங்குள்ள அலுவலகங்களில் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களும் தினமும் குமரி மாவட்டத்திற்கு வந்து செல்கிறார்கள்.

    தற்போது கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அங்கிருந்து வருவோரை கண்காணிக்க மாவட்ட சுகாதார துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர். இதற்காக கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் களியக்காவிளை சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்படுகிறது.

    மேலும் கேரளாவில் இருந்து வருவோர் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டதற்கான சான்றிதழை காட்டினால் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். இதுபோல வாகனங்களுக்கும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.

    இதுதவிர கேரளாவில் இருந்து குமரி மாவட்டம் வரும் நடைக்காவு, நெட்டா, சூழால், காக்கவிளை, இஞ்சி விளை உள்பட 13 இடங்கள் வழியாகவும் குமரி மாவட்டத்திற்கு வரலாம். எனவே அந்த இடங்களிலும் போலீசார் மற்றும் சுகாதார துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×