search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தூத்துக்குடி துறைமுகப்பகுதியில் தூர்வாரி ஆழப்படுத்தும் பணியை இன்று கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்த காட்சி.
    X
    தூத்துக்குடி துறைமுகப்பகுதியில் தூர்வாரி ஆழப்படுத்தும் பணியை இன்று கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்த காட்சி.

    மக்களின் கோரிக்கைகளை தி.மு.க. அரசு உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறது- கனிமொழி எம்.பி. பேச்சு

    தி.மு.க. ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்தில் தூத்துக்குடி மட்டுமின்றி தமிழ்நாடு ழுமுவதும் உள்ள மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருவதாக கனிமொழி எம்.பி.கூறியுள்ளார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் ரூ.5 கோடி மதிப்பில் துறைமுகப் பகுதிகளில் தூர்வாரி, ஆழப்படுத்தும் சீரமைக்கும் பணி தொடக்க விழா இன்று தூத்துக்குடியில் நடந்தது.

    தி.மு.க. மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்து பேசியதாவது:-

    தூத்துக்குடி மீனவர்களின் நீண்டநாள் கோரிக்கையான துறைமுக பகுதியை ஆழப்படுத்தும் பணி இன்று தொடங்கப்பட்டுள்ளது. மீன்பிடி துறைமுகத்தை ஆழப்படுத்தும் பணியால் இங்குள்ள 9 ஆயிரம் மீனவர் குடும்பங்கள் பயன்பெறும்.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்தில் தூத்துக்குடி மட்டுமின்றி தமிழ்நாடு ழுமுவதும் உள்ள மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

    2 நாட்களுக்கு முன்பு ராமேஸ்வரம் மீனவர்கள் முதல்-அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்தனர். அன்று மாலையே அது தொடர்பான கூட்டம் நடத்தப்பட்டு உடனடியாக நிறைவேற்றப்பட்டது.

    இப்படி அனைத்து தரப்பு மக்களிள் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கும் அரசாக, பொதுமக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றும் அரசாக தி.மு.க. அரசு உள்ளது.

    கடந்த ஆட்சி போல் இல்லாமல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறார்.

    விவசாயிகளுக்கு எதிராக சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தபோது அதற்கு எதிராக விவசாயிகளின் குரலோடு தி.மு.க.வின் குரலும் ஓங்கி ஒலித்தது. மீனவர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கைகளையும் தி.மு.க. அரசு நிறைவேற்றி வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், சண்முகையா எம்எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
    Next Story
    ×