என் மலர்

  தமிழ்நாடு

  அன்புமணி ராமதாஸ்
  X
  அன்புமணி ராமதாஸ்

  மழை நிவாரணத்தை உயர்த்தி தர வேண்டும்- அன்புமணி ராமதாஸ் டுவிட்டர் பதிவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 வீதம் இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
  சென்னை:

  பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதில் கூறியிருப்பதாவது:-

  தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையில் சேதமடைந்த 4,44,988 ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்களுக்கு வெறும் ரூ.168.35 கோடி இழப்பீடு மட்டும் 3,16,837 விவசாயிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. உழவர்களுக்கான இந்த இழப்பீடு எந்த வகையிலும் போதுமானது அல்ல.

  4,44,988 ஏக்கருக்கு ரூ.168.35 கோடி என்றால் ஒரு ஏக்கருக்கு ரூ.3,783, ஒரு உழவருக்கு ரூ.5,313 மட்டும் தான் இழப்பீடாக கிடைக்கும். இதுவரை வழங்கப்பட்ட ரூ.97.92 கோடி இழப்பீட்டில் 2,23,788 உழவர்களுக்கு சராசரியாக ரூ.4,375 மட்டுமே கிடைத்திருக்கிறது.

  பல்லாயிரக்கணக்கில் முதலீடு செய்து, மாதக்கணக்கில் சாகுபடி செய்த உழவர்களுக்கு இழப்பீடாக ஏக்கருக்கு ரூ.3,783, தனிமனிதருக்கு ரூ.4,375 மட்டுமே வழங்குவது எந்த வகையில் நியாயம்? ரூ.3,783 இழப்பீடு உழவர்களின் துயரத்தை எந்த வகையில் போக்கும்? இதுவா உழவர் நலன் காக்கும் நடவடிக்கை?

  மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டால் தான் அவர்கள் கடன் சுமையில் இருந்து மீள்வார்கள். அதனால், பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 வீதம் இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
  Next Story
  ×