என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
மாநிலங்களின் உரிமைகளை மத்திய அரசு பறிக்கக் கூடாது- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
Byமாலை மலர்20 Jan 2022 8:28 AM GMT (Updated: 20 Jan 2022 8:28 AM GMT)
குடிமைப்பணி அதிகாரிகளை தன்னிச்சையாக மத்திய அரசு பணிக்கு அழைத்துக் கொள்ளும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:
பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
மாநில அரசுகளில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை சம்பந்தப்பட்ட மாநிலங்களின் அனுமதி இல்லாமலேயே மத்திய அரசுப் பணிக்கு அயல்பணி முறையில் அழைத்துக் கொள்ளும் அதிகாரத்தை தனக்குத்தானே வழங்கிக்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.
இதற்காக இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் விதிகளின் 6-வது விதியை திருத்துவது தொடர்பாக மாநில அரசுகளிடம் மத்திய அரசு கருத்துக்கேட்டுள்ளது. மாநில அரசுகள் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் மத்திய அரசு இந்தத் திருத்தத்தை செய்யப்போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
மாநில அரசுகளுக்கு ஒதுக்கப்படும் குடிமைப்பணி அதிகாரிகளை மத்திய அரசு தன்னிச்சையாக அழைத்துக் கொள்வதென்பது மாநில அரசுகளின் உரிமையை பறிக்கும் செயலாகும். அதுமட்டுமின்றி, மத்திய அரசுக்கு அஞ்சி பணியாற்றும் நிலைக்கு அதிகாரிகள் தள்ளப்படுவர். இது நல்ல நிர்வாகத்தை வழங்காது.
குடிமைப்பணி அதிகாரிகளை தன்னிச்சையாக மத்திய அரசு பணிக்கு அழைத்துக் கொள்ளும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான மாநில உரிமையை பறிக்கும் இந்தத் திட்டத்தை தமிழக அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Next Story
×