search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    குற்றாலம் அருவி
    X
    குற்றாலம் அருவி

    குற்றாலம் அருவிகளில் 2 நாட்கள் குளிக்க தடை

    கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால் நாளை முதல் குற்றாலம் அருவிகள் மற்றும் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்ல கலெக்டர் கோபால சுந்தரராஜ் தடைவிதித்துள்ளார்.
    தென்காசி:

    தென்காசி கலெக்டர் கோபால சுந்தரராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா தொற்று தடுப்பு வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டி தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி மற்றும் சுற்றுலா தலங்களில் நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் ஆகிய 2 நாட்கள் பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது.

    பொதுமக்கள் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து பேரூராட்சி நிர்வாகத்திற்கு போதிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    Next Story
    ×