search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கொரோனா பாதித்த டாக்டர்கள், நர்சுடன் தொடர்பில் இருந்த 300 பேருக்கு பரிசோதனை

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானோரில் 2 பெண்கள் மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கியிருந்தது தெரியவந்தது.
    மதுரை:

    மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து மருத்துவ கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் கூடுதலாக பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பணி முடிந்து வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. அப்போது 2 பெண் உள்பட 5 மருத்துவக் கல்லூரி மாணவிகள் மற்றும் அரசு ஆஸ்பத்திரி நர்சு ஒருவருக்கு நோய்தொற்று உறுதி செய்யப்பட்டது.

    கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சையில் உள்ள நோயாளிகளிடம் இருந்து மேற்கண்ட 6 பேருக்கும் நோய்தொற்று பரவி இருக்கலாம் என்று தெரிய வந்து உள்ளது. இதையடுத்து அவர்களுக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானோரில் 2 பெண்கள் மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கியிருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் தங்கியிருந்த அறையில் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டு, பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டது. அடுத்தபடியாக பாதிப்புக்கு உள்ளான மருத்துவ கல்லூரி மாணவ, மாணவியருடன் தொடர்பில் இருந்த 300-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்து பார்க்கப்பட்டு வருகிறது.

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் வேலை பார்த்த 6 பேரில் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு அறிகுறி தெரியவந்து உள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் ஆய்வுப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
    Next Story
    ×