search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஜி.கே. வாசன்
    X
    ஜி.கே. வாசன்

    காங்கிரஸ் நடத்தும் பாதயாத்திரை அரசியல் உள்நோக்கமானது- ஜி.கே. வாசன் கண்டனம்

    தமிழக தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் தமிழக விவசாயிகளின் நலன் கருதி, கர்நாடக காங்கிரஸ் கட்சியின் பாதயாத்திரையை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
    சென்னை:

    த.மா.கா தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வளர்ச்சிக்கும், காவிரி டெல்டா விவசாயிகளின் செழிப்பிற்கும், உயர்விற்கும் காலம் காலமாக காவிரியையே நம்பி இருக்கிறார்கள்.

    மேகதாதுவில் அணை கட்டும் பிரச்சினையை தொடர்ந்து ஊக்குவிக்கும் விதமாக, கர்நாடகா காங்கிரசார் மேகதாதுவில் அணை கட்ட, கர்நாடகா அரசை வலியுறுத்தி தொடர்ந்து 11 நாட்கள் பாதயாத்திரை நடத்துவது தமிழக மக்களை வஞ்சிக்கும் செயலாகும்.

    காவிரி நீர் பிரச்சினை, தமிழகத்தின் பயிர் பிரச்சினையல்ல உயிர் பிரச்சினை. கர்நாடகா காங்கிரசாரின் இந்த செயல், அரசியல் உள்நோக்கம் கொண்டது, மிகவும் கண்டிக்கதக்கது. இதை நன்கு உணர்ந்திருக்கும் தமிழக தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் தமிழக விவசாயிகளின் நலன் கருதி, கர்நாடக காங்கிரஸ் கட்சியின் பாதயாத்திரையை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

    இதுவே தமிழக டெல்டா பகுதி மற்றும் அனைத்து விவசாயிகளுடைய எண்ணங்களும், கோரிக்கைகளும் ஆகும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×