search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மேட்டூர் அணை
    X
    மேட்டூர் அணை

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு

    காவிரி டெல்டா மாவட்டங்களில் திடீரென பெய்த மழையால் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.
    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வந்தது.

    இந்தநிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. நேற்று 3 ஆயிரத்து 843 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்றும் மேலும் அதிகரித்து வினாடிக்கு 4 ஆயிரத்து 14 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரியில் டெல்டா பாசனத்திற்காக 10 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 600 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு வந்தது.

    இதற்கிடையே காவிரி டெல்டா மாவட்டங்களில் திடீரென பெய்த மழையால் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.

    நேற்று காலை காவிரியில் 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் நேற்றிரவு தண்ணீர் திறப்பு 1000 கன அடியாக குறைக்கப்பட்டது. கால்வாயில் வழக்கம் போல 600 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. நேற்று 115.95 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 115.86 அடியானது.
    Next Story
    ×