
அதன்படி இன்று திருத்தணி கோவிலில் படித்திருவிழா நடைபெற்றது. காலை 8.30 மணி அளவில் திருத்தணி மலைக்கோவில் அடிவாரத்தில் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன், தி.மு.க. திருவள்ளூர் மேற்கு மாவட்டச் செயலாளர் எம்.பூபதி, திருத்தணி நகர செயலாளர் வினோத் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு படித்து விழாவை தொடங்கி வைத்தனர். விழாவில் 50-க்கும் மேற்பட்ட பஜனை குழுவினர், ஒவ்வொரு திருபடிகள் வழியாக தேவாரம், திருவாசகம், திருப்புகழ் பாடல்களை பாடியவாறு மலைக்கோவிலுக்கு சென்று மூலவரை தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் ஏராளமானோர் குவிந்து இருந்தனர். அவர்கள் ஒவ்வொரு படிகளுக்கும் மஞ்சள், குங்குமம், வைத்து மலர் தூவி வழிபட்டனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கோவில் நிர்வாகம் செய்துஇருந்தனர்.
இன்று புத்தாண்டு சிறப்பு தரிசனமும் நடைபெற உள்ளது. பக்தர்கள் கொரோனா பாதுகாப்பு வழிமுறையுடன் தரிசனத்துக்கு வருவது கோரிக்கை வேண்டுகோள் விடுத்துள்ளது.