search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மேட்டூர் அணை
    X
    மேட்டூர் அணை

    மேட்டூர் அணை நீர்மட்டம் 117 அடியாக சரிவு

    மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து பல மடங்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது.

    மேட்டூர் அணைக்கு நேற்று 4 ஆயிரத்து 445 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்றும் மேலும் சரிந்து 4 ஆயிரத்து 168 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரியில் டெல்டா பாசனத்திற்காக 15 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 600 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து பல மடங்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. கடந்த 26-ந் தேதி 119.04 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று 117.79 அடியானது. இன்று மேலும் சரிந்து 117.14 அடியானது.

    இதனால் கடந்த 3 நாட்களில் மட்டும் சுமார் 2 அடி நீர்மட்டம் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இனி வரும் நாட்களில் இதே நிலை நீடித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்புள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×