என் மலர்

  தமிழ்நாடு

  சோதனை சாவடியில் கேரளாவில் இருந்து வந்த பயணிகளிடம் விவரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள்.
  X
  சோதனை சாவடியில் கேரளாவில் இருந்து வந்த பயணிகளிடம் விவரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள்.

  ஒமைக்ரான் பரவல் எதிரொலி- தமிழக எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கேரள எல்லையான நாடுகாணி, பாட்டவயல், சோலாடி உள்பட அனைத்து எல்லையோர சோதனை சாவடிகளிலும் சுகாதாரத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.
  ஆனைமலை:

  கொரோனாவில் புதிய வகையான ஒமைக்ரான் வைரஸ் பரவி நாடு முழுவதும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. உத்தரபிரதேசம், டெல்லி, மகாராஷ்டிரா, அரியானா, கேரளா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

  கேரளாவிலும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் உள்ள கேரளா, கர்நாடகா எல்லைகளில் சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

  கூடலூர்- கர்நாடகா எல்லையான கக்கநல்லா சோதனை சாவடியில் போலீசார், சுகாதாரத்துறையினர் முகாமிட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கர்நாடகாவில் இருந்து வரும் பயணிகள் அனைவரும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

  அவர்களிடம் கொரோனா தடுப்பூசி 2 தவணையும் போட்டுள்ளனரா? அதற்கான சான்றிதழ் உள்ளதா? 72 மணி நேரத்திற்கு முன்பு கொரோனா பரி சோதனை மேற்கொண்டு, கொரோனா இல்லை என்ற நெகட்டிவ் சான்று இருக்கிறதா? எனவும் அவர்களிடம் கேட்கின்றனர்.

  கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களை வந்த வழியிலேயே திருப்பி அனுப்பி வருகிறார்கள்.

  இதேபோல் கேரள எல்லையான நாடுகாணி, பாட்டவயல், சோலாடி உள்பட அனைத்து எல்லையோர சோதனை சாவடிகளிலும் சுகாதாரத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.

  கூடலூர் பகுதியில் இருந்து தினமும் ஏராளமானவர்கள் கேரள மாநிலத்துக்கு சென்று திரும்புகின்றனர். இதனால் அவர்களை ஆவணங்களின் அடிப்படையில் கண்டறிந்து சளி மாதிரிகள் சேகரித்து வருகின்றனர்.

  இதுதவிர தமிழகத்தில் இருந்து கேரளா மற்றும் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் அரசு பஸ்கள் மற்றும் தனியார் வாகனங்களில் பயணம் செய்யும் பயணிகள் தடுப்பூசி செலுத்தி இருந்தாலும் அவர்களிடமும் மாதிரி சேகரிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

  பொள்ளாச்சி அருகே மீனாட்சிபுரம் சோதனை சாவடியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கேரளாவில் இருந்து கோவைக்கு வரும் பயணிகளுக்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? மற்றும் சளி, இருமல் உள்ளிட்ட வேறு ஏதாவது அறிகுறிகள் உள்ளதா? என்றும் பரிசோதனை செய்தனர்.

  எந்தவித நோய் பாதிப்பும் இல்லை என்று சான்றிதழ் இருந்தால் மட்டுமே தமிழக பகுதிகளில் அனுமதித்தனர்.

  கேரளாவில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதால், கேரள எல்லையில் உள்ள தமிழக பகுதிகளான மீனாட்சிபுரம், கோவிந்தாபுரம், நடுப்புணி, கோபாலபுரம், வீரப்ப கவுண்டனூர், கோவிந்தனூர், ஜமீன் காளியாபுரம் உள்ளிட்ட சோதனை சாவடிகளில் மீண்டும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

  சுகாதார ஆய்வாளர், செவிலியர்யர்கள் கொண்ட மருத்துவ பணியாளர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கேரளாவில் இருந்து வரும் நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் இல்லை என்றால் திருப்பி அனுப்பி வருகின்றனர். சளி, காய்ச்சல் இருந்தால் பொதுமக்கள் உடனே அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

  இவ்வாறு அவர்கள் கூறினர்.
  Next Story
  ×