search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட பெண்
    X
    குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட பெண்

    பஸ்சில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட பெண்

    திண்டுக்கல் அருகே அரசு பஸ்சில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட பெண்ணை போக்குவரத்து ஊழியர்கள் போலீசில் ஒப்படைத்தனர்.
    திண்டுக்கல்:

    ஈரோட்டிலிருந்து மதுரை நோக்கி 50 பயணிகளுடன் அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சில் கரூரிலிருந்து 40 வயதுடைய பெண் ஏறினார். பஸ் புறப்பட்ட சிறிது நேரத்தில் அவர் ஆபாச வார்த்தைகளால் பேசத் தொடங்கினார். மேலும் இருக்கையின் மீது அமர்ந்து 2 கால்களையும் எதிரில் இருந்த இருக்கையில் வைத்தபடி இருந்தார். அப்போதுதான் அவர் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது.

    இதனால் அருகில் இருந்த பயணிகள் வேறு இடத்துக்கு மாறத் தொடங்கினர். சிறிது நேரத்தில் போதை தலைக்கேறிய நிலையில் ஆபாச வார்த்தைகளால் அனைவரையும் திட்டத் தொடங்கினார். மேலும் பயணிகளிடம் கலாட்டாவிலும் ஈடுபட்டார். கண்டக்டர் அவரை அமைதியாக இருக்கும்படி பல முறை எச்சரித்தும் அவரையும் அந்த பெண் ஆபாசமாக பேசத் தொடங்கினார். இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் முகம் சுளித்தனர்.

    பஸ் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் நோக்கி வந்தபோது அனைவரும் அவரை போலீசில் ஒப்படைக்குமாறு கூறினர். வேடசந்தூர் வந்ததும் வேறுவழியின்றி பஸ்சை வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் நிறுத்தினர். அங்கு அவரை பஸ்சில் இருந்து கீழே இறக்கி இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசாரிடம் நடந்த விபரங்களை கூறி ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அவர் தனது பெயர் சாந்தி என்றும் தான் கரூரைச் சேர்ந்தவர் என்றும் தெரிவித்தார். மற்றபடி அவர் போதையிலேயே இருந்ததால் மகளிர் காவலர்களை கொண்டு அவரை விசாரிக்குமாறு இன்ஸ்பெக்டர் அறிவுறுத்தினார். ஆனால் போலீசாரையும் அந்த பெண் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டினார். இதனால் போலீஸ் நிலையத்திலும் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பிறகு பஸ்சில் வந்த பயணிகள் நிம்மதி பெருமூச்சுடன் மதுரை நோக்கி சென்றனர்



    Next Story
    ×