என் மலர்

  தமிழ்நாடு

  மழை
  X
  மழை

  நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பரவலாக மழை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 400 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து 400 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
  நெல்லை:

  நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது.

  நேற்று பிற்பகல் பல்வேறு இடங்களில் சாரல்மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்தது. அதிகபட்சமாக மணிமுத்தாறு அணைப்பகுதியில் 20 மில்லிமீட்டர் மழை பெய்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகபட்சமாக கோவில்பட்டி, வைப்பார் பகுதியில் 6 மில்லிமீட்டர் மழை பெய்தது.

  தென்காசி மாவட்டத்தில் கடனா நதி அணைப்பகுதியில் அதிகபட்சமாக 6 மில்லிமீட்டர் மழை பெய்தது. மற்ற இடங்களில் சாரல் மழை பெய்தது.

  மழை காரணமாக குற்றாலத்தில் உள்ள மெயினருவி, ஐந்தருவி ஆகியவற்றில் இன்று தண்ணீர் நன்றாக விழுந்தது. பாபநாசம் அகஸ்தியர் அருவியிலும் இன்று தண்ணீர் வெள்ளமாக கொட்டியது. வருகிற 20-ந் தேதி முதல் குற்றால அருவிகளில் குளிக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதைத்தொடர்ந்து குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து கடைகளையும் திறக்க வியாபாரிகள், பொருட்களை அடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

  பாபநாசம் அணைக்கு இன்று காலை விநாடிக்கு 1,379 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 842 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணை நீர்மட்டம் இன்று 138.95 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 150.06 அடியாக உள்ளது.

  மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 400 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து 400 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

  அணை நீர்மட்டம் இன்று 116.50 அடியாக உள்ளது. கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார், வடக்கு பச்சையாறு, நம்பியாறு, கொடுமுடியாறு, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வண்டலோடை அணை ஆகிய அனைத்து அணைகளும் நிரம்பிய நிலையில் உள்ளன.

  நெல்லை, தென்காசி மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் விபரம் வருமாறு:-

  மணிமுத்தாறு-20, பாபநாசம்-16, சேரன் மகாதேவி-15.6, சேர்வலாறு-13, ராதாபுரம்-12, கொடுமுடியாறு-12, கன்னடியன்-11.8, களக்காடு-10.4, நம்பியாறு-7, மூலக்கரைப்பட்டி-6, கடனாநதி-6, நெல்லை-5.6, பாளை-4, அம்பை-4, நாங்குநேரி-2, தென்காசி-1.4, ஆய்க்குடி-1, சிவகிரி-1, கருப்பாநதி-1.

  தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் விபரம் வருமாறு:-

  கோவில்பட்டி-6, வைப்பாறு-6, சாத்தான்குளம்-5.4, வேடநத்தம்-5, கடம்பூர்-5, காயல்பட்டினம்-4, கழுகுமலை-4, கயத்தாறு-4, விளாத்திகுளம்-2, திருச்செந்தூர்-1, ஸ்ரீவைகுண்டம்-1.1, கீழஅரசடி-1.

  Next Story
  ×