search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    முல்லைப் பெரியாறு அணை
    X
    முல்லைப் பெரியாறு அணை

    முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு

    வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையின் நீர் மட்டம் 70.11 அடியிலேயே நிலை நிறுத்தப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை பொறுத்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    கூடலூர்:

    முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ள நிலையில் வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் கடந்த மாதம் 29-ந் தேதி 142 அடியை எட்டியது. அதனைத் தொடர்ந்து கேரளாவுக்கு அதிக அளவு உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இன்று 8-வது நாளாக அணையின் நீர் மட்டம் 141.90 அடியில் உள்ளது.

    நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு 5421 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து கேரள பகுதிக்கு 4521 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நேற்று வரை 1800 கன அடி வரை தமிழக பகுதிக்கு திறக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை முதல் 900 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. நீர் இருப்பு 7639 மி.கன அடியாக உள்ளது.

    71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர் மட்டம் கடந்த மாதம் 10-ந் தேதி 69 அடியை எட்டியது. அதன் பிறகு அணைக்கு வரும் நீர் முழுவதும் அதிக அளவு திறக்கப்பட்டதால் தேனி, திண்டுக்கல், மதுரை உள்பட 5 மாவட்ட வைகை ஆற்றங்கரையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    தற்போது வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையின் நீர் மட்டம் 70.11 அடியிலேயே நிலை நிறுத்தப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை பொறுத்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    நேற்று 10576 கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது அணையில் இருந்து 4403 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு நீர் வரத்து 8819 கன அடியாக உள்ளது. நீர் இருப்பு 5855 மி.கன அடியாக உள்ளது. தற்போது மழை சற்று ஓய்ந்திருப்பதால் அணை பகுதியில் நீர் வரத்து படிப்படியாக குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×