search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    முட்டை
    X
    முட்டை

    முட்டை விலை மேலும் 20 காசுகள் உயர்வு

    தற்போது மழை குறைந்து நிலைமை சீராகி வருவதால் அதிக அளவில் முட்டைகள் அனுப்பப்படுகிறது. இதனால் முட்டை கொள்முதல் விலையும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 450 காசுகளாக இருந்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டையின் கொள்முதல் விலையை அதிரடியாக 15 காசுகள் உயர்த்தி 465 காசுகளாக நிர்ணயித்தனர். இந்த நிலையில் இன்று காலை நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை விலையை மேலும் 20 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று முட்டை கொள்முதல் விலை 485 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டது.

    இதுகுறித்து தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறுகையில், வடமாநிலங்களில் குளிர்காலம் தொடங்கி உள்ளதால் கடந்த ஒரு வாரமாக அதிகமாக முட்டை விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. மேலும் முட்டை ஏற்றுமதியும் செய்யப்படுகிறது.

    அதன்படி ஒரு வாரத்தில் மட்டும் ஒன்றரை கோடி முட்டை அனுப்பப்பட்டு உள்ளது. ஏற்கனவே மழை காரணமாக முட்டைகளை அடுக்கி வைக்க அட்டை தட்டுப்பாடு ஏற்பட்டது. தற்போது மழை குறைந்து நிலைமை சீராகி வருவதால் அதிக அளவில் முட்டைகள் அனுப்பப்படுகிறது. இதனால் முட்டை கொள்முதல் விலையும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×