search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீடுகளில் வெள்ளம் சூழ்ந்திருப்பதை காணலாம்
    X
    வீடுகளில் வெள்ளம் சூழ்ந்திருப்பதை காணலாம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் விடிய விடிய மழை- மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

    ராமநாதபுரம் பகுதியில் பல்வேறு இடங்களில் உள்ள உப்பளங்களில் விளைந்த உப்புகள் பிளாஸ்டிக் தார்பாய் விரித்து பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.
    ராமநாதபுரம்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி இடைவிடாது பெய்து வருகிறது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்தது. ராமநாதபுரம், கீழக்கரை, பனைக்குளம், திருப்புல்லாணி, ஏர்வாடி உள்ளிட்ட பகுதியில் இடி, மின்னலுடன் விடிய விடிய மழை பெய்தது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    வீடுகளில் உள்ள கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி குளம் போல் காணப்படுகிறது. ராமநாதபுரம் பகுதியில் பல்வேறு இடங்களில் உள்ள உப்பளங்களில் விளைந்த உப்புகள் பிளாஸ்டிக் தார்பாய் விரித்து பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.

    தொடர்ந்து பெய்து வரும் மழையால் சாலையோர வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகள் மழையில் நனைந்த நிலையில் பள்ளிக்குச் சென்றனர்.

    மாவட்டத்தில் இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த நிலையில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

    ராமநாதபுரம்-32.40, மண்டபம்-33.60, பள்ளமோர்குளம்-35.50, ராமேசுவரம்-54.20, பாம்பன்-31.50, தங்கச்சிமடம்-40.60, திருவாடானை-35.20, தொண்டி-4.00, ஆர்.எஸ்.மங்கலம்-26 80, பரமக்குடி12.80, முதுகுளத்தூர்-33.20, கமுதி6.00, கடலாடி-45.80, வாலிநோக்கம்-35.20, மொத்தம்-462.80, சராசரி-26.68

    வட்டாணம், தீர்த்தாண்ட தானம் ஆகிய பகுதிகளில் மழை பதிவு இல்லை.

    Next Story
    ×