என் மலர்

  செய்திகள்

  வைகை அணை
  X
  வைகை அணை

  66 அடியை எட்டிய நீர்மட்டம்- வைகை அணை கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வைகை அணை நீர் மட்டம் 66 அடியை எட்டியதைத் தொடர்ந்து கரையோர மக்களுக்கு இன்று முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
  ஆண்டிபட்டி:

  தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் தேனி, திண்டுக்கல், மதுரை உள்பட 5 மாவட்ட பாசனத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. 71 அடி உயரமுள்ள இந்த அணை இந்த ஆண்டு ஏற்கனவே 2 முறை முழு கொள்ளளவை எட்டியது.

  கடந்த சில நாட்களாக தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வந்தது. மேலும் வருசநாடு, வெள்ளிமலை உள்ளிட்ட நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை காரணமாக மூல வைகை ஆற்றிலும் நீர்வரத்து அதிகரித்தது.

  இதனால் வைகை அணையின் நீர் மட்டம் இன்று காலை 66.01 அடியாக உயர்ந்தது. அணைக்கு 4168 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 900 கன அடி நீர் பாசனத்துக்கும் 69 கன அடி நீர் மதுரை மாநகர குடிநீருக்கும் என மொத்தம் 969 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 4810 மி.கன அடியாக உள்ளது. இதனையடுத்து வைகை அணை கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி பொதுப்பணித்துறை சார்பில் முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஆற்றங்கரையோரம் குளிக்கவோ, துணிகள் துவைக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது என்று தெரிவித்துள்ளனர். மேலும் அணைக்கு வரும் நீரின் அளவை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க முன்னேற்பாடு பணிகளையும் வருவாய்த்துறையினர் செய்து வருகின்றனர்.

  ஏற்கனவே மஞ்சளாறு, சோத்துப்பாறை ஆகிய அணைகள் நிரம்பிவிட்டதால் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது.  Next Story
  ×