search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெங்கு காய்ச்சல்
    X
    டெங்கு காய்ச்சல்

    கோவையில் குழந்தை உள்பட 4 பேருக்கு டெங்கு காய்ச்சல்

    கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு காய்ச்சல் பாதிப்பினால் வரும் நோயாளிகள் எண்ணிக்கை சற்று உயர்ந்துள்ளது.
    கோவை:

    கோவை மாவட்டத்தில் பெய்து வரும் பருவமழை காரணமாக டெங்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. நகர் மற்றும் ஊரக பகுதிகளில் பாதிப்பு இருந்து வருகிறது. இதுதவிர மலேரியா, வைரஸ் காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்துள்ளது. இதனால் அரசு மருத்துவமனையின் காய்ச்சல் பிரிவுக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது. இதில் சிலருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பிற்கான அறிகுறி தென்படுகிறது.

    இதுபோன்ற நபர்களுக்கு டெங்கு டெஸ்ட் எடுக்கப்படுகிறது. இதில் காய்ச்சல் என கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த ஒரு குழந்தை உள்பட 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் டெங்கு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுகுறித்து மருத்துவமனையின் டீன் நிர்மலா கூறியதாவது:-

    கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு காய்ச்சல் பாதிப்பினால் வரும் நோயாளிகள் எண்ணிக்கை சற்று உயர்ந்துள்ளது.

    தற்போது கொரோனா பாதிக்கப்பட்ட 81 பேர் டெங்குவிற்கு ஒரு குழந்தை உள்பட 4 பேர், மலேரியா மற்றும் வைரஸ் காய்ச்சலுக்கு 80 பேர் வரை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பருவமழை துவங்கியுள்ளதால், வைரஸ் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும். காய்ச்சல் பாதிப்பு இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×