search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெயில்
    X
    ரெயில்

    கோவை சிறப்பு ரெயில்கள் உள்பட 24 ரெயில்கள் நேரம் மாற்றம்

    மதுரை-ராமேசுவரம் விரைவு சிறப்பு ரெயில் (06655) மானாமதுரை சந்திப்பை இரவு 7.10 மணிக்கும், ராமநாதபுரத்தை இரவு 8.08 மணிக்கும், பாம்பனை இரவு 9.09 மணிக்கும் வந்தடையும்.
    கோவை:

    தெற்கு ரெயில்வே நிர்வாகம் ஆண்டும் தோறும் சில ரெயில்களின் நேரத்தில் மாற்றம் எற்படுத்தி வருகிறது. அதன்படி சென்னை எழும்பூர்- கன்னியாகுமரி, கோவை-மயிலாடுதுறை உள்பட 24 சிறப்பு ரெயில்களின் சேவை நேரம் மாற்றப்பட்டுள்ளது.

    கோவை-மயிலாடுதுறை ஜன் சதாப்தி விரைவு சிறப்பு ரெயில் (02084) மயிலாடுதுறையை மதியம் 1.55 மணிக்கு சென்றடையும். நாகர்கோவில்-கோட்டயம் விரைவு சிறப்பு ரெயில் (06366) கொல்லத்திற்கு மாலை 4.55 மணிக்கு சென்றயடையும் அடையும்.

    சென்னை எழும்பூர்-கொல்லம் விரைவு சிறப்பு ரெயில் (06723) இரணியல் ரெயில்நிலையத்தை காலை 9.36 மணிக்கும், குழித்துறை ரெயில் நிலையத்தை காலை 9.52 மணிக்கும், கொல்லத்திற்கு மதியம் 12.55 மணிக்கும் அடையும். சென்னை எழும்பூர்-கன்னியாகுமரி விரைவு சிறப்பு ரெயில்(02633) நாகர்கோவிலை காலை 5 மணிக்கு சென்றடையும்.

    கோவை-நாகர்கோவில் விரைவு சிறப்பு ரெயில் (02668) மதுரை சந்திப்பை அதிகாலை 12.25 மணிக்கும், விருதுநகர் சந்திப்பை அதிகாலை 1.13 மணிக்கும் அடையும். இந்த ரெயில்களின் நேரம் மாற்றம் 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

    புவனேஷ்வர்-ராமேசுவரம் விரைவு சிறப்பு ரெயில் (08496) திருச்சிக்கு மாலை 4.05 மணிக்கும், புதுக்கோட்டையை மாலை 5.03-க்கும், மானாமதுரையை மாலை 6.55 மணிக்கும், ராமநாதபுரத்தை இரவு 7.53 மணிக்கும் சென்றடைகிறது.

    மதுரை-ராமேசுவரம் விரைவு சிறப்பு ரெயில் (06655) மானாமதுரை சந்திப்பை இரவு 7.10 மணிக்கும், ராமநாதபுரத்தை இரவு 8.08 மணிக்கும், பாம்பனை இரவு 9.09 மணிக்கும் வந்தடையும். இந்த ரெயில்களின் நேரம் மாற்றம் அடுத்த மாதம் 4-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. மொத்தம் 24 சிறப்பு ரெயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×