search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணை
    X
    மேட்டூர் அணை

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 ஆயிரத்து 251 கன அடியாக அதிகரிப்பு

    மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து மிக குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
    மேட்டூர்:

    கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து உபரி நீர் தொடர்ந்து காவிரியில் திறந்து விடப்படுகிறது. இதற்கிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை தண்ணீரும் சேர்ந்து தமிழக - கர்நாடக எல்லையை கடந்து ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.

    ஒகேனக்கல்லில் விநாடிக்கு 28 ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் வருகிறது. இதனால் ஒகேனக்கல்லில் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஒகேனக்கல்லில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது.

    மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 21 ஆயிரத்து 390 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மீண்டும் அதிகரித்து 27 ஆயிரத்து 251 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரியில் 100 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. கால்வாயில் 450 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று காலை முதல் தண்ணீர் திறப்பு 300 கன அடியாக குறைக்கப்பட்டது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து மிக குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று 101.5 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் ஒரு அடிக்கு மேல் உயர்ந்து 102.79 அடியானது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளளது.
    Next Story
    ×