search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    நெல்லை- தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பரவலாக மழை

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் நேற்று மழை சற்று குறைவாக பெய்ததால் அணைகளுக்கு குறைந்த அளவே தண்ணீர் வருகிறது. பாபநாசம் அணைக்கு இன்று காலை வினாடிக்கு 1,198 கனஅடி தண்ணீர் வருகிறது.
    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது.

    நேற்று மாலை நெல்லை, பாளை, சங்கரன்கோவில், மூலைக்கரைப்பட்டி, நாங்குநேரி உள்பட பல்வேறு நகர பகுதிகளிலும் கனமழை பெய்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம், கயத்தாறு, சூரங்குடி உள்பட பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

    அதிகபட்சமாக சங்கரன்கோவிலில் 89.4 மில்லி மீட்டரும், மூலைக்கரைப்பட்டியில் 64 மில்லி மீட்டரும் மழை பெய்தது.

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் நேற்று மழை சற்று குறைவாக பெய்ததால் அணைகளுக்கு குறைந்த அளவே தண்ணீர் வருகிறது. பாபநாசம் அணைக்கு இன்று காலை வினாடிக்கு 1,198 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து ஆற்றில் வினாடிக்கு 1,667 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. பாபநாசம் அணை நீர்மட்டம் 138.30 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 143.70 அடியாக உள்ளது.

    மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 444 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து தண்ணீர் எதுவும் திறக்கப்படவில்லை. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 77.90 அடியாக உள்ளது.

    கடனாநதி 82.20, ராமநதி 73.25, கருப்பாநதி 65.95, வடக்கு பச்சையாறு 16.65, நம்பியாறு 10.36, கொடுமுடியாறு 50.50 அடியில் நீர்மட்டம் உள்ளது.

    அடவிநயினார் அணை நிரம்பி 131.50 அடியிலும், குண்டாறு அணை நிரம்பி 36.10 அடியிலும் உள்ளது.

    தற்போது நெல் அறுவடை பணிகள் நடந்து கொண்டிருப்பதால், கால் வாய்களில் கூடுதல் தண்ணீர் திறக்கப்படவில்லை. அணைகள் பாதுகாப்பு கருதி தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வழக்கத்தைவிட கூடுதல் தண்ணீர் செல்கிறது.

    நெல்லை, தென்காசி மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    சங்கரன்கோவில்- 89.4, மூலைக்கரைப்பட்டி- 64, நாங்குநேரி- 46, சிவகிரி- 16, களக்காடு- 14.2, கொடுமுடியாறு- 10, பாளை- 10, நெல்லை- 9.4, ராதாபுரம்-9, சேரன் மகாதேவி- 5.4, அடவிநயினார்- 5, ஆய்குடி- 4, தென்காசி- 3.8, கருப்பாநதி- 3, ராமநதி- 2, பாபநாசம்- 2, குண்டாறு- 2, கன்னடியன் கால்வாய்- 1.6, மணிமுத்தாறு- 1, செங்கோட்டை- 1.

    தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    கயத்தாறு- 43, சூரங்குடி- 29, விளாத்திகுளம்- 27, மணியாச்சி- 26.5, ஸ்ரீவைகுண்டம்- 20, கடம்பூர்- 10, எட்டயபுரம்- 6.1, கழுகுமலை- 6, சாத்தான்குளம்-5.4, வைப்பாறு- 3, கோவில்பட்டி- 2, காடல்குடி- 2.
    Next Story
    ×