என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மெட்ரோ ரெயில் நிலைய பணி- சென்னையில் போக்குவரத்து மாற்றம்
Byமாலை மலர்18 Oct 2021 9:29 AM GMT (Updated: 18 Oct 2021 9:29 AM GMT)
மெட்ரோ ரெயில் பணிக்காக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
சென்னை:
சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னை அயனாவரம் ஆண்டர்சன் சாலையில் அயனாவரம் ஆர்டிஓ அலுவலகம் முதல் ஆண்டர்சன் தெரு வரை மெட்ரோ ரெயில் நிலையம் கட்டுமான பணி தொடங்குகிறது. இதனால், அக்டோபர் 19ஆம் தேதி முதல் ஆண்டர்சன் சாலை ஒரு வழி பாதையாக மாற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே அன்று முதல் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகின்றன.
* ஆண்டர்சன் சாலையில் ஆர்.டி.ஓ அலுவலகம் சந்திப்பு முதல் கான்ஸ்டிபன் சாலை சந்திப்பு வரை ஒரு வழி பாதையாக மாற்றப்படுகிறது.
* பில்கிங்டன் சாலையில் கொன்னூர் நெடுஞ்சாலை முதல் கான்ஸ்டிபன் சாலை சந்திப்பு வரை ஒரு வழி பாதையாக மாற்றப்படுகிறது.
* ஆண்டர்சன் சாலையில் அயனாவரம் கொன்னூர் நெடுஞ்சாலை சந்திப்பிலிருந்து வழக்கம் போல் பெரம்பூர் நோக்கி செல்லலாம்.
* ஆண்டர்சன் சாலையில் கான்ஸ்டிபன் சாலை சந்திப்பிலிருந்து அயனாவரம் கொன்னூர் நெடுஞ்சாலைக்கு செல்ல இயலாது.
* மோட்டர் சைக்கிள்கள் மற்றும் இலகு ரக வாகனங்கள் கான்ஸ்டிபன் சாலை மற்றும் பில்கிங்டன் சாலை சந்திப்பிலிருந்து பில்கிங்டன சாலை வழியாக கொன்னூர் நெடுஞ்சாலைக்கு செல்லலாம்.
* கனரக வாகனங்கள், கான்ஸ்டிபன் சாலை மற்றும் பில்கிங்டன் சாலை சந்திப்பில் வலது புறம் திரும்பி கான்ஸ்டிபன் சாலை (ரெயில்வே மருத்துவமனை) போர்சுகீஸ் சாலை வழியாக கொன்னூர் நெடுஞ்சாலைக்கு செல்லலாம்.
* கொன்னூர் நெடுஞ்சாலையிலிருந்து பில்கிங்டன் சாலை வழியாக பெரம்பூர் நோக்கி செல்ல அனுமதியில்லை. அவ்வழியாக செல்ல வேண்டிய வாகனங்கள் கொன்னூர் நெடுஞ்சாலையில் நேராக சென்று இடது புறமாக திரும்பி ஆண்டர்சன் சாலை மற்றும் கான்ஸ்டிபன் சாலை வழியாக செல்லலாம்.
மேலும் வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
×