search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தடுப்பூசி
    X
    தடுப்பூசி

    6 ஊராட்சிகளில் 100 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது

    கோவை மாவட்டத்தில் உள்ள 6 ஊராட்சிகளில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    கோவை:

    தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    கொரோனா 3-வது அலையின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக குறைந்தபட்சம் 70 சதவீத மக்களுக்கு தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி கோவையில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    கடந்த 4 வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. முதல் கட்டமாக நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் 1.51 லட்சம் பேருக்கும், 2-வது கட்டமாக 94 ஆயிரம் பேருக்கும், 3-ம் கட்டமாக 1.13 லட்சம் பேருக்கும், 4-வது மெகா தடுப்பூசி முகாமில் 81,454 பேருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு கோவை மாவட்டத்தில் மட்டும் 4 லட்சம் பேருக்கு மேல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள 6 ஊராட்சிகளில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து சுகாதாரத்துறை துணை இயக்குனர் அருணா கூறியதாவது:-

    கோவை மாவட்டத்தில் உள்ள 228 ஊராட்சிகளில் தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் ஜாகீர்நாயக்கன் பாளையம், காரமடை வட்டாரத்தில் சிக்காரம் பாளையம், நெல்லித்துறை, அன்னூர் வட்டாரத்தில் கரியாம்பாளைம், கிணத்துக்கடவு வட்டாரத்தில் கக்கடவு, வெள்ளருக்கம்பாளையம் ஆகிய 6 ஊராட்சிகளில் 100 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

    மற்ற ஊராட்சிகளில் 90 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அனைத்து ஊராட்சிகளிலும் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
    Next Story
    ×