search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்புல்லாணியில் உப்புகள் குவித்து வைக்கப்பட்டுள்ளதை காணலாம்
    X
    திருப்புல்லாணியில் உப்புகள் குவித்து வைக்கப்பட்டுள்ளதை காணலாம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் உப்பு உற்பத்தி அதிகரிப்பு

    அதிகளவு உப்பு உற்பத்தியாலும், சந்தையில் தற்போது உப்புக்கு நல்ல விலை கிடைப்பதாலும் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் வாலிநோக்கம், மாரியூர், முந்தல், திருப்புல் லாணி, தேவிபட்டினம், திருப்பாலைக்குடி, நதிப்பாலம் ஆகிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான உப்பளங்கள் உள்ளன. இதில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். ஊரடங்கு காரணமாக உப்பு உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டது.

    உப்பளங்களில் கடும் வெப்பத்தில் பணியாற்ற தொழிலாளர்கள் விரும்புவதில்லை. பாதுகாப்புக்காக காலணிகள் அணிந்து தான் உப்பு உற்பத்தியில் ஈடுபடுகின்றனர்.

    அதிகாலை 4 மணி முதல் காலை 11 மணி வரை மட்டுமே பணியாற்றுகின்றனர். இதனால் அதிகளவில் உற்பத்தி இருந்தும் உப்பை சேகரிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

    6 மாத சீசனுக்கு மட்டுமே உப்பு உற்பத்தி இருக்கும். மற்ற ஆறு மாதங்களில் இருக்காது. வழக்கமாக மார்ச் மாதம் உப்பு உற்பத்தி தொடங்கும். நடப்பாண்டில் கொரோனா அச்சுறுத்தலால் உற்பத்தி பணிகள் நடைபெறாமல் இருந்தது.

    ஊரடங்கு தளர்வை தொடர்ந்து தற்போது பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. மேலும் கடுமையான வெப்பம் நிலவுவதால், உப்பு உற்பத்தியும் அதிகரித்து வருகிறது. அவ்வப்போது பெய்து வரும் மழையால் உப்பு சேகரிப்பு பாத்திகளில் சேதமடைந்தது வருகிறது.

    ராமநாதபுரத்தில் தயாரிக்கப்படும் உப்பு சமையலுக்கும், தொழிற்சாலைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. தொழிற்சாலைகளுக்கு தேவையான உப்பு தரம் குறைந்ததாக இருக்கும்.

    ராமநாதபுரம் சமையல் உப்புதரமாகவும், சுவையாகவும் இருக்கும். இங்கு உற்பத்தியாகும் உப்பை, தொழிற்சாலைகளுக்கு மொத்தமாக கொள்முதல் செய்கின்றனர். இங்கு கடல் நீரில் உப்பு தயாரிப்பதில்லை. போர்வெல் அமைத்து மோட்டார் பயன்படுத்தி பாத்திகளில் நிறைத்து வைக்கின்றனர்.

    வெப்பத்தில் ஆவியாகி உப்பாக மாற்றம் பெறுகிறது. உப்பு வாரியபின் அந்த நிலத்தில் உள்ள கழிவு நீரை மீண்டும் பாத்திகளில் நிறைத்து, உப்பு உற்பத்தி செய்யப்படுவதால், கழிவுகள் இருப்பதில்லை. ஒரு ஏக்கரில் தினசரி 4 டன் உப்பு கிடைக்கிறது.

    சுழற்சி முறையில் ஒரு நாள் விட்டு, ஒரு நாள் தொடர்ந்து உப்பு எடுக்கப்படுகிறது. அதிகளவு உப்பு உற்பத்தியாலும், சந்தையில் தற்போது உப்புக்கு நல்ல விலை கிடைப்பதாலும் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னர் உப்பு உற்பத்தியை மேலும் அதிகரிக்க ஏராளமான பணியாளர்களை கொண்டு உப்பள பணிகள் நடந்து வருகிறது.



    Next Story
    ×