search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாக்டர் பா சிவந்தி ஆதித்தனார் சிலை
    X
    டாக்டர் பா சிவந்தி ஆதித்தனார் சிலை

    நாளை 86வது பிறந்தநாள் விழா- டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை

    மணிமண்டபத்தில் உள்ள டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் முழு உருவ வெண்கல சிலைக்கு அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்.பி. ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.
    திருச்செந்தூர்:

    பத்திரிகை, கல்வி, ஆன்மீகம், விளையாட்டு, பொதுச்சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இமாலய சாதனைகள் படைத்து முத்திரை பதித்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 86-வது பிறந்தநாள் விழா நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது.

    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு பெருமை சேர்க்கும் விதமாக திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினத்தில் தமிழக அரசு சார்பில் ரூ. 1 கோடியே 67 லட்சம் மதிப்பில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 22-ந்தேதி மணி மண்டபம் திறக்கப்பட்டது.

    மேலும், டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் பிறந்தநாளான செப்டம்பர் 24-ந் தேதி ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்தது.

    கனிமொழி எம்பி

    அதன்படி திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினத்தில் உள்ள டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தில், அவரது பிறந்தநாள் விழா அரசு சார்பில் நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது.

    விழாவுக்கு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் தலைமை தாங்குகிறார். மணிமண்டபத்தில் உள்ள டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் முழு உருவ வெண்கல சிலைக்கு அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்.பி. ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.

    எம்.எல்.ஏ.க்கள் சண்முகையா, ஊர்வசி அமிர்தராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆகியோரும் மரியாதை செலுத்துகின்றனர்.

    அ.தி.மு.க. சார்பில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், நற்பணி மன்றத்தினர் உள்பட பலர் மணிமண்டபத்தில் உள்ள டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.


    Next Story
    ×