search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    திருப்பதி செல்லும் பஸ்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு

    கோயம்பேடு, மாதவரம் பஸ் நிலையத்தில் இருந்து தினமும் 150 பஸ்கள் திருப்பதிக்கு இயக்கப்படுகிறது. இந்த பஸ்களில் தற்போது பயணம் செய்யும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
    சென்னை:

    ஆந்திராவில் வழிபாட்டு தலங்களுக்கு தளர்வு அளிக்கப்பட்டதை அடுத்து திருப்பதி கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய கட்டுப்பாடு நீங்கியது.

    கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று பாதிப்பால் தினமும் 2 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. கடந்த 20-ந்தேதி முதல் 8 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இதனால் தமிழகத்தில் இருந்து திருப்பதி செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    சென்னையிலும் பக்தர்கள் கூட்டம் கூடியுள்ளது. கோயம்பேடு, மாதவரம் பஸ் நிலையத்தில் இருந்து தினமும் 150 பஸ்கள் திருப்பதிக்கு இயக்கப்படுகிறது. இந்த பஸ்களில் தற்போது பயணம் செய்யும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    இதுகுறித்து அரசுப் போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    திருப்பதி கோவிலில் கூடுதலாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் பயணிகள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. ஒரு பஸ்சில் 5 பக்தர்கள் மட்டுமே இதுவரையில் பயணம் செய்தனர்.

    தற்போது 30 பேர் வரை பயணம் செய்கிறார்கள். 2 நாட்களில் திருப்பதி பக்தர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. மாதவரத்தில் இருந்தும் திருப்பதி செல்லும் ஆந்திர அரசு பஸ்களிலும் பயணிகள் அதிகளவு செல்கிறார்கள். தற்போது புரட்டாசி மாதம் என்பதால் திருப்பதி செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை கூடியுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×