என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தெற்கு மன்னார் வளைகுடா பகுதியில் கடல் நீரை மேகம் உறிஞ்சி எடுக்கும் அரிய நிகழ்வு
Byமாலை மலர்22 Sep 2021 5:09 AM GMT (Updated: 22 Sep 2021 5:09 AM GMT)
கடல் நீரை மேகம் உறிஞ்சி எடுக்கும் அரிய நிகழ்வை மீனவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வீடியோ எடுத்தனர்.
ராமேசுவரம்:
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது.
அதன்படி ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் நேற்று மழை பெய்தது.
மேலும் சூறாவளி காற்று வீசியதால் வானில் கருமேகங்கள் திரண்டன. இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இந்த நிலையில் நேற்று ராமேசுவரம் அருகே உள்ள தெற்கு மன்னார் வளைகுடா கடலில் மழை பெய்து கொண்டிருந்தது.
அப்போது அங்கு கருமேகங்கள் திரண்டு திடீரென்று கடலில் வீசிய சூறாவளி காற்றால் சூழல் ஏற்பட்டன.
அப்போது குவிந்திருந்த மேகக்கூட்டங்கள் கடல் நீரை உறிஞ்சி எடுக்கும் அரிய நிகழ்வு நடந்தது.
இதனை அங்கிருந்த மீனவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வீடியோ எடுத்தனர். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகியுள்ளது.
தெற்கு மன்னார் வளைகுடா பகுதியில் நடந்த அரிய நிகழ்வு குறித்து கடல் ஆராய்ச்சி விஞ்ஞானிகள் கூறுகையில், வழக்கமாக கடலில் சூழல் ஏற்படுவது அரிய நிகழ்வாக தான் இருக்கும். பருவநிலை மாற்றத்தின்போது கடலின் மேற்புறத்தில் உள்ள குளிர்ந்த காற்றும், கடல் வெப்பக்காற்று இணையும்போது இதுபோன்ற மாற்றங்கள் ஏற்படும்.
தமிழகத்தில் கடல் தண்ணீரை மேகம் உறிஞ்சி எடுக்கும் நிகழ்வு தற்போது தான் நடந்துள்ளது என்றனர்.

Next Story
×