search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கண்காணிப்பு கேமிராவில் பதிவான மர்ம வாலிபர்.
    X
    கண்காணிப்பு கேமிராவில் பதிவான மர்ம வாலிபர்.

    பரமக்குடி வங்கியில் மேலாளர் என கூறி பெண்ணிடம் ரூ.1 லட்சத்தை பறித்த மர்ம வாலிபர்

    பரமக்குடி வங்கியில் அடமானம் வைத்த நகையை மீட்க வந்த பெண்ணிடம் மேலாளர் என கூறி ரூ.1 லட்சத்தை பறித்து சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    பரமக்குடி:

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி கண்ணகி தெருவைச் சேர்ந்தவர் பாண்டியம்மாள். இவர் சாலை ஓரத்தில் அமர்ந்து புட்டு வியாபாரம் செய்து வருகிறார்.

    கடந்த ஆண்டு பரமக்குடி இந்தியன் ஓவர்சீர் வங்கி கிளையில் 5 பவுன் நகையை அடமானமாக வைத்திருந்தார்.

    நகை வைத்து ஒரு வருடம் முடிந்ததால் நகையை திருப்புவதற்காக நேற்று வங்கிக்கு பணத்துடன் வந்தார். அப்போது வங்கியில் நின்று கொண்டிருந்த மர்ம வாலிபர் பாண்டியம்மாளை அழைத்து, “நான் தான் இந்த கிளையின் மேலாளர், உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்" என கனிவுடன் கேட்டார்.

    இதனை நம்பிய பாண்டியம்மாள் நான், தங்கள் வங்கியில் 5 பவுன் நகையை அடமானம் வைத்துள்ளேன் என்றார். உடனே அந்த மர்ம வாலிபர் 5 பவுன் நகை வைத்தவர்கள் அனைவருக்கும் தமிழக அரசு தள்ளுபடி செய்து விட்டது என கூறினார். அந்த நபர் கூறியதை பாண்டியம்மாள் நம்பினார்.

    பின்னர் அந்த வாலிபர், நீங்கள் பெருமாள் கோவில் பகுதியில் உள்ள தபால் நிலையத்திற்கு சென்று 2 ரூபாய் ஸ்டாம்ப் வாங்கிக் கொண்டு இங்கே வாருங்கள் என கூறிவிட்டு வங்கியில் இருந்தார்.

    இதை நம்பிய பாண்டியம்மாள் 2 ரூபாய் ஸ்டாம்ப் வாங்கி வந்து அந்த வாலிபரிடம் கொடுத்தார். அதற்கு அந்த மர்ம ஆசாமி, நீங்கள் பணத்தை என்னிடம் தாருங்கள் நான் அந்த பணத்தை உங்கள் வங்கி கணக்கில் வரவு வைத்து நீங்கள் வைத்த நகையை திருப்பி கொடுத்து விடுகிறேன் என்று கூறினார்.

    உடனே பாண்டியம்மாள் தன் கையில் வைத்திருந்த 1 லட்சத்து 19 ஆயிரம் ரூபாயை அந்த வாலிபரிடம் கொடுத்தார். பின்னர் அந்த வாலிபர் 5 பவுன் நகை தள்ளுபடி செய்யப்பட்டதால் உங்கள் வங்கி கணக்கில் இதற்கான தொகை விரைவில் வரவு வைக்கப்படும் என சொல்லி விட்டு நைசாக அந்த இடத்தை விட்டு சென்று விட்டார்.

    திடீரென மாயமான அந்த வாலிபரை காணவில்லை என்ன வங்கியில் உள்ளவர்களிடம் பாண்டியம்மாள் கேட்டார். அதன் பிறகுதான் அந்த நபர் திட்டமிட்டு பாண்டியம்மாளை ஏமாற்றியது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாண்டியம்மாள் அழுது புரண்டார்.

    இதை பார்த்து வங்கியில் இருந்தவர்கள் அந்த வாலிபரை தேடினர். ஆனால் அதற்குள் அவன் பணத்துடன் தப்பி ஓடிவிட்டான்.

    இதுகுறித்து பரமக்குடி குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு விரைந்து வந்த போலீசார் வங்கியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அதில் நூதன முறையில் கைவரிசை காட்டிய மர்ம வாலிபரின் உருவம் பதிவாகி இருந்தது. அதை வைத்து போலீசார் அவனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    பரமக்குடி காந்திஜி தெருவில் 5 வங்கிகள் ஒரே இடத்தில் இருப்பதால் இந்த தெரு எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இங்கு வாலிபர் பணத்தை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×