என் மலர்

  செய்திகள்

  கோவை குற்றாலம் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து சென்ற காட்சி.
  X
  கோவை குற்றாலம் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து சென்ற காட்சி.

  கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு- சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீடிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோவை குற்றாலத்திற்கு செல்ல மீண்டும் தடை விதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.
  கோவை:

  கோவை சாடிவயல் பகுதியில் உள்ள கோவை குற்றாலத்திற்கு வனத்துறையினர் 5 மாதங்களுக்கு பின் கடந்த 6-ந் தேதி முதல் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி வழங்கினர்.

  கொரோனா விதிமுறைகளை பின்பற்றி ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வந்தது.

  இதனால் கோவை குற்றாலத்தில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதையடுத்து கடந்த 9-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை 4 நாட்கள் கோவை குற்றாலம் மூடப்படும் என வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. தற்போதும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி கோவை குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை நீடிக்கப்பட்டுள்ளது.

  மறு அறிவிப்பு வரும் வரை குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதியில்லை என மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் தெரிவித்துள்ளார். மீண்டும் தடை விதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.  Next Story
  ×