search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணை
    X
    மேட்டூர் அணை

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு

    மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
    மேட்டூர்:

    கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகளில் இருந்து 13 ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூருக்கு வருகிறது.

    ஒகேனக்கலில் தற்போது 12 ஆயிரம் கன அடி தண்ணீர் வருகிறது. இதனால் ஒகேனக்கலில் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    மேட்டூர் அணைக்கு நேற்று 11 ஆயிரத்து 19 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 10 ஆயிரத்து 510 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரியில் 5 ஆயிரம் கன அடியும், கால்வாயில் 750 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று 75.76 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 76.18 அடியானது.
    Next Story
    ×