search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெட்ரோ ரெயில்
    X
    மெட்ரோ ரெயில்

    மெட்ரோ ரெயில் பெட்டிகளை வாடகைக்கு வாங்கி இயக்குவதற்கு முடிவு

    மெட்ரோ ரெயில் 2-வது திட்ட பணிகளுக்கு 118.9 கி.மீ தொலைவுக்கு சுரங்கப்பாதைகளும், மேம்பால பாதைகளும் அமைக்கப்பட உள்ளன.
    சென்னை:

    சென்னையில் மெட்ரோ ரெயில் திட்டம் கொண்டு வரப்பட்ட போது மெட்ரோ ரெயில் பெட்டி பிரேசில் நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது.

    இதற்கு அதிக செலவு ஆனது. தற்போது சென்னையில் மெட்ரோ ரெயில் திட்டம் 2-வது பகுதிக்கான பணிகள் தொடங்கி உள்ளன.

    மெட்ரோ ரெயில் 2-வது திட்ட பணிகளுக்கு 118.9 கி.மீ தொலைவுக்கு சுரங்கப்பாதைகளும், மேம்பால பாதைகளும் அமைக்கப்பட உள்ளன. இதற்கு சுமார் ரூ.88 ஆயிரம் கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த செலவு பணிகளை ஆய்வு செய்த மத்திய அரசு மெட்ரோ ரெயில் 2-ம் திட்டத்துக்கான செலவீனத்தை கணிசமாக குறைக்கும்படி அறிவுறுத்தியது. இதையடுத்து எந்தெந்த வகைகளில் செலவை குறைக்கலாம் என ஆய்வு செய்யப்பட்டது.

    அதன்படி மெட்ரோ ரெயில் 2-ம் திட்ட பணிகளில் கணிசமாக செலவுகள் குறைக்கப்பட்டு உள்ளன. தற்போது ரூ.61 ஆயிரத்து 843 கோடி செலவில் 2-ம் திட்ட பணிகளை நிறைவேற்ற திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த செலவு குறைப்பு பணிகளில் மெட்ரோ ரெயில் பெட்டிகள் முதன்மை இடம்பெற்று உள்ளன.

    முதல் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு ரெயில் பெட்டிகளை விலை கொடுத்து வாங்கியது போல் இல்லாமல் வாடகைக்கு வாங்கி செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக செலவீன தொகை பெரிய அளவில் குறைந்து உள்ளது.

    மெட்ரோ ரெயில் பெட்டிகளை தனியார் நிறுவனங்களிடம் இருந்து வாடகைக்கு பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. எத்தனை தனியார் நிறுவனங்கள் இதில் விருப்பத்துடன் உள்ளன என்று ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது. பராமரிப்பு பணிகளை எப்படி மேற்கொள்வது என்பது பற்றியும் ஆய்வு செய்யப்படுகிறது.

    தனியாரிடம் இருந்து பெறப்படும் மெட்ரோ ரெயில் பெட்டிகள் 39 ஆண்டு கால வாடகை திட்டத்தின் கீழ் பெறுவதற்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
    Next Story
    ×